பஹ்ரைனில் தமுமுகவின் தா‌ஃவா பிரிவான (மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தை எத்திவைப்பது) இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) நோன்பு பெருநாளைக்குப் பிறகு தொடர்ச்சியாக வாரம்தோறும் "சாந்தி - சமாதான சந்திப்பு" என்ற தலைப்பில் இஸ்லாமிய மற்றும் மாற்று மத நண்பர்களை அவர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று சந்தித்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சகோ. அப்துர் ரவூப் (36528725) அவர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சகோ. ஜாபர் அலி (அக்குப்பஞ்சர் மருத்துவர்) அவர்களுடன் சேர்ந்து சகோ காஜா மற்றும் சகோ. தமிமுன் அன்சாரி சகோ. செய்யது பாஷா ஆகியோர்களும் செயல்படுகின்றனர்.

கடந்த 8/10/2008 அன்று புதையாவில் நடந்த சந்திப்பில் பெருவாரியான நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி ரிஸ்வான் பங்கேற்று உரையாற்றினார்.

15/10/2008 அன்று சல்மானியா கிரவுன் எலக்ட்ரானிக்ஸ் சேம்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


இதன் தொடர்ச்சியாக 22/10/2008 அன்று மனாமா ETA கேம்பில் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் மூலம் தமிழர்களிடம் இஸ்லாம் குறித்து அறிமுக‌மும், அவர்களின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது அவர்களுக்கு இருக்கும் ஐயங்களை கலையும் விதம் அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறது. இந்த சந்திப்பில் சகோ. முஹைதீன் ஷா அவர்கள் உரையாற்றினார்.

0 comments: