பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள் ஆரம்ப விழா கடந்த 25-07-2008 வெள்ளி மாலை 8-30 மணிக்கு தமுமுக மர்கஸில் வைத்து நடைபெற்றது. மண்டலத் தலைவர் முஹைதீன் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜகிரி யூசுப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். கரம்பை ஜக்கரிய்யா வரவேற்புரை ஆற்றினார்.


இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வேல்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாக மேலாளர் ஐ. சபீருத்தீன் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 2 கம்ப்யூட்டர்கள் வழங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு B.F.C. Real Estate Pvt Ltd., நிறுவன பங்குதாரர்களின் தலைவர் S.M.T. காலித், டிஸ்கவர் இஸ்லாம் தாயீ சகோ. முபாரக், பஹ்ரைன் தமிழ் சங்க பிரதிநிதி திருவை பஷீர், அக்குப்பஞ்சர் மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். அமைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.


மேலும் கணிப்பொறி வகுப்பின் ஆசிரியர் அப்துல் காதர் நிர்வாகிகள் கோட்டார் ரபீக், ஜாபர், பீர்முஹம்மது பேசினர். இந்நிகழ்ச்சியில் ஹாமா டவுன் தமுமுகவின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வேலூரைச் சேர்ந்த சகோ. வினோத் தன் புதிய பெயரான ஏ. அப்துல் வாஹித் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கலந்துகொண்டோர் தக்பீர் முழக்கமிட்டு வாழ்த்தினர். முடிவில் தமீமுன் அன்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.

0 comments: